Map Graph

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள விலங்கியல் பூங்கா

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்பது வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் வண்டலூரில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை மத்தியத் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 31 கிலோமீட்டர், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த விலங்குக்காட்சிச் சாலை 1855 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். இப்பூங்கா, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 92.45-ஹெக்டேர் (228.4-ஏக்கர்) பரப்பளவில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பகுதி உட்பட 602 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தப் பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகும். விலங்குக்காட்சிசாலையில் 1,265 ஏக்கர் பரப்பளவில் 2,553 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, பூங்காவில் சுமார் 1,500 காட்டு இனங்கள் உள்ளன. இதில் 46 அழிந்து வரும் உயிரினங்கள் உட்பட, இதன் 160 சிற்றினங்கள் பாதுகாப்புப் பகுதிகளில் உள்ளன. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, பூங்காவில் சுமார் 47 வகையான பாலூட்டிகள், 63 வகையான பறவைகள், 31 வகையான ஊர்வன, 5 வகையான நீர்நில வாழ்வன, 28 வகையான மீன்கள் மற்றும் 10 வகையான பூச்சிகள் இருந்தன. இந்தப் பூங்கா, மாநிலத்தின் விலங்கினங்களின் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதுமலை தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

Read article
படிமம்:VandalurZoo_18Aug2012_MainEntrance.JPGபடிமம்:EdwardBalfour.jpgபடிமம்:Chimpanzee_vandaloor_zoo_chennai_03.jpgபடிமம்:Commons-logo-2.svg